நேற்று ஒரு குறும்படம் பார்த்தேன். ஒரே வரியில் சொல்வதானால் சூப்பர்.குறும்படங்கள் மேல் எனக்கு இருந்த என்னத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அற்புதமான ஸ்க்ரீன்ப்ளே & காமிடி. கண்டிப்பாக எல்லாரும் பாருங்க. முக்கியமாகஅனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.
சமிபத்தில் தேவர் சிலையே சேதபடுத்த முயன்றதாக சில பேரை கைது பண்ணிருந்தாங்க . இதே காரணத்துக்காக தென் மாவட்டங்கள்ல பெரிய கலவரம் சில ஆண்டுகள் முன்னாடி ஏற்பட்டது நினைவு இருக்கலாம். இந்த நிலை தொடர்ந்தால் மொத்த காவல்துறையுமே சிலைகள பாதுகாக்க அனுப்ப வேண்டியதாக இருக்கும் .அரசு புதிய சிலைகளை வைக்க அனுமதி வழங்கும் முன் இந்த விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். முன்பு கலவரம் ஏற்பட்ட போது மாவட்ட பெயர்களையும் பேருந்து பெயர்களையும் மாற்றியது போல இந்த விஷயத்திலும் தெளிவான முடிவே எடுக்க வேண்டும்.பகுத்தறிவு பேசும் நம் தலைவர்கள் இந்த உருவ வழிபாட்டை கண்டிப்பா நிறுத்தனும். அப்படி கண்டிப்பா வேணும்னா ஒரு கோவில் மதிரிய iல்லை நினைவாலயம் மாதிரியோ மட்டும் வைக்க அனுமதி அளிக்கலாம்.இதன்னால பிரச்சனைல குளிர்காய நினைக்கும் சில சில்லறை அரசியல் வியாதிகள் கொட்டாத அடக்கலாம்.
இந்த கேள்வி நசிகேதன் காலம் முதல் கேட்கப்பட்ட கேள்வி என்றாலும் போன வாரம் நான் கேட்க வேண்டி வந்தது. எங்கள் குடும்ப நண்பரின் மகன் விபத்தில் பலியான போது நான் மிகவும் வருந்தி கேட்டேன். இதை பற்றி நம் முன்னோர்கள் என்ன சொல்றாங்க என்று பார்த்தால் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் உறவுக்கு அழிவு தானே. அப்பா உறவுகள் எல்லாம் பொய்யானு தோணுது. சமீப காலமா இடுகாடுகள் புனரமிக்கும் பணி தொடங்கியதில் இருந்து மரணத்தை பற்றிய என்னோட பார்வை மாறிடுச்சு.எனக்கேன்னாவ் மரணத்தை பார்த்து பயப்படுவது தேவையில்லாதது என்றே தோன்றுகிறது. மரணத்தை அது வரும் போது எதிர்கொள்வோம். அதுவரை மரணத்தை போற்றுவோம்.
நான் ரொம்ப நாளா யோசிச்சு ஒரு வழியா ப்ளாக் எழுத ஆரமிசிட்டேன். இதுனால விலை வாசி குறையுமா இல்லை முதல்வருக்கு பாராட்டு விழ குறையுமான்னு தெரியலை. ஆனா நான் சந்திக்கற பல சுரசியமான விசையங்கள் இங்க பகிர்ந்துக்கலாம்னு தோனுச்சு. eதை தொடங்க எனக்கு உக்கம் கொடுத்த என் தம்பி மௌளிக்கு நன்றி .
